வத்தளை, பள்ளியவத்தையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோகிராம் கேரள கஞ்சாவை வத்தளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், விநியோகத்திற்கு தயார் நிலையில் போதைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததோடு, சந்தேக நபர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here