யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை, வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதையுடைய கோவிந்தசாமி கல்பனா என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது இந்நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உடலை புதைக்குமாறு கூறி, நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.