Tamil News Channel

வரலாறு படைத்த 19 வயது இளம் வீரர்!

IMG_5685-1024x683

யூரோ கால்பந்து தொடரில் மிகவும் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை துருக்கிய வீரர் அர்டா குலர் படைத்துள்ளதுடன், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

நடப்பு யூரோ 2024 கால்பந்து தொடரின் ஜோர்ஜியா அணிக்கு எதிரான போட்டியின் போது துருக்கியே அர்டா குலர் (Arda Guler) கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், புதிய சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

இந்தப் போட்டியில் துருக்கியே அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்ஜியா அணியை வீழ்த்தியது.

இதில் அர்டா குலர் (Arda Guler) அடித்த கோல் மூலம், இளம் வயதில் யூரோ கால்பந்து தொடரில் அடித்த வீரர் எனும் கிறிஸ்டியனோ ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 19 வயது 128 நாட்களில் கோல் அடித்த நிலையில், அர்டா குலர் 19 வயது 114 நாட்களில் கோல் அடித்துள்ளார்.

அர்டா குலர் 2019ஆம் ஆண்டில் Turkish Cupin 2023 தொடரை Fenerbahce அணி வெல்ல உதவியதுடன், ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

துருக்கிய மெஸ்ஸி என்று அடிக்கடி குறிப்பிடப்படும்குலர் , சமீபத்திய மாதங்களில் கால்பந்து போட்டிகளில் அசுற வளர்ச்சியை கண்டுள்ளார்.

தலைநகர் அங்காராவைச் சேர்ந்த அவர் ஒன்பது வயது முதல் கால்பந்து விளையாடி வருகின்றார்.

16 வயது 174 நாட்கள் இருக்கும் போதே அர்டா குலர் தேசிய அணிக்கு அழைத்துவரப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *