வரலாற்றில் முதல் தடவையாக ஈரானை வீழ்த்திய இலங்கை அணி!!!
இலங்கை கரப்பந்தாட்ட அணி தனது வரலாற்றில் முதல் தடவையாக ஈரான் அணியை தோற்கடித்துள்ளது.
மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் தேசிய கைப்பந்து லீக் இலங்கை மற்றும் ஈரான் அணிகள் எதிர்கொள்ளும் போட்டி இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணி 3 இற்கு 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, இந்தப் போட்டியில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட இரண்டாவது வெற்றி இதுவாகும்.
இதேநேரம், ஈரான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
![]()