இந்திய அணியின் சகலதுறை வீரன் சிவம் தூபே வரலாற்றுச் சாதனையொன்றைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
இதன்படி 30 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற உலகின் முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இவர், 35 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.