January 13, 2026
வர்த்தமானி அறிக்கையின் படி சம்பளமாக 1,700 ரூபாய் கிடைத்தால் மகிழ்ச்சி….!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

வர்த்தமானி அறிக்கையின் படி சம்பளமாக 1,700 ரூபாய் கிடைத்தால் மகிழ்ச்சி….!

Jul 6, 2024

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிப்பது தொடர்பில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்தது.

கம்பனிகளோடு எந்தவொரு பேச்சுவாரத்தையும் செய்யமால் வர்த்தமானி வெளியிட்டது தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றும் செயற்பாடகவே உள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பு விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரினதும் ஆசையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *