வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000-ஐ கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 06 மாவட்டங்களில் 96,584 பேர் வறண்ட காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி காலநிலை காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் மொனராகலை மாவட்டத்தில் உள்ளனர். அந்த மாவட்டத்தில் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களின் 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here