December 9, 2025
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Top புதிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Nov 15, 2023

வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்,  வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *