அதிபர், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததை அடுத்து பாடசாலைகள் வழமை போன்று திறக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழமை போன்று பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் அதிபர், ஆசிரியர்களின் சங்கங்கள் அண்மைக்காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், சில பாடசாலைகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வடமேல் மாகாணத்தில் மாத்திரம் ஆசிரியர், மாணவர் வருகை வீதத்தில் ஆசிரியர்களின் பாடசாலை வருகை வீதம் அதிக வீதத்தைப் 86.97% பெற்றுள்ளதோடு, மாணவர்களின் வருகை 67.18% வீதமாகவும் காணப்பட்டுள்ளது.
Post Views: 2