
வவுனியாவில் இடம்பெற்ற பால்புதுமையினர் நடைபவனி..
தங்களது உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகள் கொண்ட மனிதப் பிறப்புக்களே என்பது போன்ற கருத்தினை முன்வைத்து பால்புதுமையினர் நேற்று புதன்கிழமை (26.06) வவுனியாவில் நடைபவனியொன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சென்றடைந்து நிறைவு பெற்றதோடு இதில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் யாழ். சங்கம் என்ற பால்புதுமையினத்தவர்களுக்கான அமைப்பு குறித்த நடைபவனியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.