வவுனியாவில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் பறயநாலங்குளம் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.