வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில், அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காக கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில், அது கழுத்தில் இறுகி மரணித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞனின் சடலம், உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post Views: 2