மின்சாரம் தாக்கி மரணமடைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு மூவின இளைஞர்களும் இணைந்து வவுனியாவில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் நேற்று (18) இந்நிகழ்வு இடம்பெற்றது.
கொவிட் பெருந்தொற்று காலத்திலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் இன, மதங்களைக் கடந்து முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பணியாற்றி இருந்தார்.
இதனால் மக்கள் மனங்களில் அவர் சிறந்த அரசியல்வாதியாக இடம்பிடித்திருந்த நிலையில் வவுனியா தமிழ், சிங்கள், முஸ்லிம் இளைஞர்களும் அவரது படத்திற்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.