January 20, 2026
வவுனியாவில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

வவுனியாவில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!

May 6, 2025

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில தற்போது வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக, வவுனியாவில் மாநகர சபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவ் நிலையங்களில் காணப்பட்ட வாக்குப் பெட்டிகள் 56 வாக்கு எண்ணும் நிலையங்களின் வட்டார மையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *