வவுனியா, ஓமந்தையில் கடந்த மே மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பமொன்று பயணித்த கார், டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது .
இவ் விபத்தில் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராக பணிபுரிபவருமான சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார்.
இவ் விபத்தில் படுகாயமடைந்த அவரது மனைவியான யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர், மகன் ஆகியோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது மகன் சிகிச்சை பலனின்றி நேற்று (1) இரவு உயிரிழந்துள்ளார்.







