
வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு…!
வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பிலும் மற்றும் அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த ஊழியர்கள் கறுப்பு நிற உடையணிந்து கையில் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான கலந்துரையாடல் வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் நிலையில், துணை வேந்தர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவுக்கு எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பதை கண்டித்து இந்த கறுப்புக்கொடி போராட்டத்தினை நடத்தியிருந்தனர்.
இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் உள்ள வீதி ஓரங்களில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்ததோடு துணைவேந்தர்கள் வருகை தந்தபோது வரிசையாக நின்று தமது எதிர்ப்பினை கல்வி சாரா ஊழியர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.