வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட 25,000 ஏக்கர் காணிகளை மீட்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதை அவர் குறிப்பிட்டார்.
இது வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்கள், காணியற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணம் செய்து காணிகள் அற்று வாழும் குடும்பங்களின் நன்மைக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை ஆகும்.
கூகுள் வரைபடத்தின் மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் இந்த காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



