வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பதுடன், இவர் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையிலிருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் மரணமடைந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் அச்சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும், வீதியால் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post Views: 2