November 18, 2025
வாகனங்களை வாங்குபவர்களுக்கு அறிவிப்பு
News News Line Top Updates புதிய செய்திகள்

வாகனங்களை வாங்குபவர்களுக்கு அறிவிப்பு

Jan 27, 2024

வாகனங்களை வாங்கி சொந்த பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்துபவர்கள் விரைவில் தங்களது பெயரில் பதிவு செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்  விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தற்போது சிசிடிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் கடிதம் அனுப்பும் திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்திருப்பது முக்கியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் வாகனத்தின் புதிய உரிமையாளர் மற்றும் பழைய உரிமையாளர் இருவரும் சிரமத்தைத் தவிர்க்கலாம் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *