மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்ததன் காரணமாக மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருமானம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் முதல் ஒன்பது மாதங்களில் 57.1 சதவீதம் அதிகரித்து 21.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருவாயாக 2022 முதல் ஒன்பது மாதங்களில் 13.7 பில்லியன் ரூபாய்கள் ஈட்டப்பட்டுள்ளன.
அதன்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருமானம் 21.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.