வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கியானது தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றவில்லை எனவும் ஏற்கனவே சில வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக எளிதாக்குவது முக்கியமான முடிவு எனவும் குறிப்பிட்டுள்ளார் .
மற்றும் இதன்மூலம் அந்நியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.