அனுராதபுரம் – பாதெனிய ஏ28 பிரதான வீதியின் தலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ, கெக்கிராவ வீதியில் தலாவ நகருக்கு அருகில் வசித்து வந்த 23 வயதுடைய கோவிந்தகே இஷான் நிமந்த என்ற இசைக்கலைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் இன்று (8) அநுராதபுரத்திலிருந்து தலாவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதியை விட்டு வாகனம் மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.