நாட்டின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் பரிவர்த்தனை பணத்திற்கு விற்கக்கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.