January 23, 2026
வானிலை எச்சரிக்கை! – அடுத்த ஒரு வாரம் மக்கள் மிக அவதானம்!
Top உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

வானிலை எச்சரிக்கை! – அடுத்த ஒரு வாரம் மக்கள் மிக அவதானம்!

Dec 8, 2025

எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய  நிரம்பல் நிலையை எட்டியுள்ளது.

எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மி.மீ. க்கு மேற்பட்ட மழை கிடைத்தால் அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.

இதனால் குறிப்பிட்ட (09.12.2025 முதல் 13.12.2025) தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அகையால் அன்புக்குரிய இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

துறைசார் அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது.

குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சற்று குறைவாகப் பேணுவது சிறந்தது.

அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மலையக உறவுகளே…

உங்களுக்கு அதிக ஆபத்து! தயவுசெய்து மண்சரிவு அபாயமுள்ள இடங்களிலிருந்து விலகிப் பாதுகாப்பான இடங்களில் இருங்கள். ஏனெனில்:

ஏற்கனவே பெய்த மழையால் மண் ஈரமாகவே உள்ளது.

கடந்த 3 நாட்களாகக் கடும் குளிர் (நுவரெலியாவில் 11°C) நிலவுவதால், மண்ணிலுள்ள நீர் ஆவியாகவில்லை.

நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

இன்று(08.12.2025)  முதல் மீண்டும் மழை பெய்யவுள்ளதால் மண்சரிவு அபாயம் மிக அதிகம்.

வடக்கு, கிழக்கு & வடமத்திய மாகாண விவசாயிகளுக்கு:

குளங்களின் நீர்மட்டத்தை முழு கொள்ளளவில் (FSL) வைத்திருக்க வேண்டாம். சற்று குறைத்து வையுங்கள்.

ஜனவரி நடுப்பகுதி வரை மழை கிடைக்கும் என்பதால், பின்னர் குளங்களை நிரப்பிக் கொள்ளலாம்.

டிசம்பர் 3ம், 4ம் வாரங்களில் வங்கக்கடலில் புதிய காற்றுச் சுழற்சிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

வெள்ள அபாயம்: இன்று 08.12.2025 முதல் 14.12.2025 வரை தாழ்நிலப் பகுதிகளிலும், ஆறு மற்றும் குளங்களை அண்மித்த பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து விழிப்பாக இருக்கவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *