January 13, 2026
வானிலை முன்னறிவிப்பு
News News Line Top புதிய செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

Jan 3, 2024

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் .

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *