ஆயிரம்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் சடலம் ஒன்று கிராம மக்களால் கண்டு பொலிசாரால் மீட்டெடுக்கபட்டுள்ளது.
குறித்த சடலம் விவேகானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பிள்ளையான்குட்டி புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் யானை தாக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு ஆயிரம் கால் மண்டப வைரவர் ஆலயத்திற்குச் சென்று, வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.