வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிது காலம் மூடப்பட்டிருந்த இந்தத் தொழிற்சாலை, இப்போது லாபம் ஈட்டி வருவதாகவும், பழைய கடன்களை அடைத்து வருவதாகவும், தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சாலையுடன் தொடர்புடையதாக பாசிக்குடா அருகே ஒரு சுற்றுலா மையத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, 1990களின் பிற்பகுதியில் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு 2020 இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு செயல்பாடுகள் தடைபட்டன.
இந்த நிலையில், சுனில் ஹந்துன்நெத்தி கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி மாதம் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை லாபம் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.