வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் நேற்றைய தினம் (19) இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.



