February 7, 2026
வா அம்மா போலாம்.. தாய், தந்தை கை பிடித்து அசல்ட்டாக நடந்து சென்ற நயன்தாரா மகன்கள்..!
சினிமா

வா அம்மா போலாம்.. தாய், தந்தை கை பிடித்து அசல்ட்டாக நடந்து சென்ற நயன்தாரா மகன்கள்..!

May 30, 2025

“வா அம்மா போலாம்..” தாய், தந்தை கை பிடித்து அசல்ட்டாக நடந்து சென்ற நயன்தாரா மகன்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நயன்தாரா- விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.

இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திரைத்துறையினர் அனைவரும் வாய்பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர்.

மகன்களுடன் கொஞ்சி விளையாடும் படங்கள்

இந்த நிலையில், புதுமணத் தம்பதியினராக இருந்த நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்களும் தற்போது உள்ளனர். இவர்களின் திருமணம் வீடியோ வெளியிடுவதில் பாரிய சிக்கல்கள் கிளம்பினாலும் ரசிகர்கள் ஆவலுடன் தேடிப்பார்க்கும் ஆவணப்படமாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா அவருடைய இரண்டு மகன்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகினாலும், குழந்தைகளுக்கு தனியிடம் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *