கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த 10.05.2024 அன்றைய தினம் நாய் கடிக்கு இலக்கான சிறுமி ஒருவர் உரிய சிகிச்சை பெறாத நிலையில் நேற்று முந்தினம் (25.06) வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக தருமபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மேலதிக அன்று 26 05.2024 சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நான்கு வயதுடைய குமாரசாமிபுரம் பகுதியைச்சேர்ந்த சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் அப்பகுதியில் பல பேர் அந்த நாய் கடிக்கு இலக்கான நிலையில் அவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் வழங்குவதற்காக அவர்களில் நான்கு பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியின் பராமரிப்பில் தொடர்பு வைத்திருந்த 11 பேருக்கும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியரின் ஆலோசனைகளுக்கு அமலாக அவர்களுக்கு முற்ப பாதுகாப்பு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் கட்டாகாளி நாய்களும் அதிகரித்து காணப்படுவதை அவதானிக்க முடிந்தவுடன் அவைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றமையும் மேலும் இறந்த சிறுமியின் தாயார் வீட்டு வறுமைகாரணமக வெளியூர் சென்று இன்று (27.06) சிறுமியின் இறப்பு செய்திகேட்டு நாடுதிரும்பியுள்ளார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலீசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் இறந்த சிறுமியின் சடலம் பிரோத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
