சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விதிமுறைகள் அடுத்த மாதம் (ஜூலை 1) முதலாம் திகதி நடைமுறைக்கு வருகிறது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களுக்கு மட்டுமே விசா வழங்க அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் தற்காலிக பட்டதாரி விசா , வருகையாளர் விசா , மின்னணு பயண ஆணைய விசா , மருத்துவ சிகிச்சை விசா, இலத்திரனியல் வருகையாளர் விசா, போக்குவரத்து விசா, தூதரக தற்காலிக விசா, தற்காலிக வேலை விசா, வீட்டுப் பணியாளர் தற்காலிக விசா போன்ற தற்காலிக விசாக்களை வைத்திருப்பவர்கள் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என கூறப்படுகிறது.