புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விசுவமடு வள்ளூவர்புரம் பகுதியிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர் ஒருவரின் தும்புத்தொழிற்ச்சாலையில் நேற்றைய தினம் மதியம் தீ பரவியது.
இதனை தொடர்ந்து கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் பத்து இலட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த தொழிற்ச்சாலையின் உரிமையாளர் தெரிவித்தார்.
இதன் போது கிளிநொச்சி பிரதேச சபையினர்”மற்றும் அயலார் அனைவருக்கும் வீட்டு உரிமையாளனர் நன்றிதெரிவித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2