கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 226 பேர் புனர்வாழ்வு மையத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.

1கிலோ 370 கிராம் ஹெரோயின், 556 கிராம் ஐஸ், 7 கிலோ 800 கிராம் கஞ்சா, 3 கிலோ 500 கிராம் மாவா மற்றும் 1,075 போதை மாத்திரைகளும் சோதனை நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here