புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்களுக்காக இன்று மற்றும் நாளை விசேட பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 25% இன்றைய தினம் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் புகையிரதத்தில் வரும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு புகையிரதங்கள் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகையிரத துறை துணை பொது மேலாளர் என்.ஜே..இடிபோலகே குறிப்பிட்டுள்ளார்.