Tamil News Channel

விஜயதாசவின் அமைச்சுப் பதவி பறிப்பு..!

விஜயதாச ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயம் என்பதுடன் அவர் கட்சி உறுப்புரிமை மற்றும் அமைச்சுப் பதவி ஆகியவற்றையும் இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சி என்ற ரீதியில் இதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். விஜயதாச ராஜபக்ஷ கட்சி உறுப்புரிமையை இழக்கும் நிலையும் காணப்படுகின்றது.

இந்த நாட்டின் நீதி மற்றும் சட்டம் தொடர்பாக நன்றாக தெரிந்த விஜயதாச ராஜபக்ஷ போன்ற ஒருவர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதன் பாரதூரமான காரணிகளை அவர் நன்கு அறியக்கூடும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் பிறிதொரு கட்சியின் அங்கத்துவத்தை பெறம் பட்சத்தில் அவரது கட்சி உறுப்புரிமை நீக்கப்படும்.

கடந்த காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடத்பெற்றிருந்தன. எனவே விஜயதாச ராஜபக்ஷ விடயம் தொடர்பாக கட்சியின் ஒழுக்காற்றுகுழுவில் பெரும்பாலும் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

விஜயதாச ராஜபக்ஷவின் அமைச்சு பதவி நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது  என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *