December 9, 2025
விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிப்பு..!
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிப்பு..!

Jun 11, 2024

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், உறுப்பினராகவும் செயற்படுவதற்கு  விதிக்கப்பட்டிருந்த  தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு  கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இதன் போது  வழக்கு தொடர்பில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க காலஅவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இதையடுத்து, இந்த தடை உத்தரவை எதிர் வரும் 25ம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *