வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருந்த GOAT படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் நல்ல வசூலும் வந்துகொண்டிருக்கிறது.
GOAT படத்தில் வரும் கிரிக்கெட் போட்டி நடைபெறும் காட்சியில் சிஎஸ்கே-வின் தோனியை நிஜத்திலேயே நடிக்க வைக்க முயற்சித்தாராம் வெங்கட் பிரபு. போட்டி தொடங்கும் முன்பு விஜய் அவருக்கு வாழ்த்து சொல்வது போல அந்த காட்சி எடுக்க இருந்தாராம்.
அதற்காக தோனியை வெங்கட் பிரபு அணுகிய நிலையில் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.
GOAT ஷூட்டிங் நடைபெற இருந்த நாளில் ஏற்கனவே தோனி மற்ற நிகழ்ச்சிகளுக்காக தேதி ஒதுக்கிவிட்டதால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் என்பது குறிப்பிடத்தக்கது.