நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று (08.07) இரவு 08.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய புலத்சிங்கள, மத்துகம, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, எலபாத்த, ஏஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 2