இணைய சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலைசெய்துள்ளார்.
இந்தியாவின், ஆந்திராவைச் சேர்ந்த 21 வயதான ராமையா புகலா என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.
விடுதியில் தங்கியிருந்து தனது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட புகலா, இணைய சூதாட்டத்தில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பதால் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் 3 இலட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்கி அதனை இணைய சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
கடன் வாங்கிய பணம் மொத்தத்தையும் சூதாட்டத்தில் இழந்ததில் மனமுடைந்த நபர், தான் தங்கியிருந்த விடுதியின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் அறிந்து குறித்த இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.