விடைத்தாளின் மீள் பரிசீலனை முடிவுகள் இரண்டு வாரங்களில்..!
கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாளின் மீள் பரிசீலனை முடிவுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழமையை விட இம்முறை மீள் பரிசீலனைக்காக இரண்டு மடங்கு பரீட்சை விடைத்தாள் தொகை கிடைத்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளதுடன்அடுத்த மாத முற்பகுதியில் அதனை வெளியிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னராக மீள் பரிசீலனை முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்ட அவர், அது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
![]()