விண்வெளியிலுள்ள இரகசியங்களை கண்டுபிடிப்பதில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போது விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக 1 மில்லியன் மைல் (16,09,344 கிலோமீட்டர்) வேகத்தில் நகரும் மர்மப்பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மர்மப் பொருளுக்கு ‘CWISE J1249’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மர்மப் பொருளை நட்சத்திரமாவோ அல்லது விண்கல்லாகவோ வகைப்படுத்த முடியவில்லை. ஆனால், இதில் நைட்ரஜன் இல்லாத காரணத்தால் இதனை வாயு நிறைந்த ராட்சத கிரகம் அல்லது குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் என வரையறுக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.