ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் இன்று (03) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஜீப் வண்டி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த நிலையில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய ஜீப் வண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்துள்ள நிலையில் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.