டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி செல்ல இன்று செவ்வாய்க்கிழமை காலை விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸார்கள் விமானத்தை தனி இடத்துக்கு கொண்டு சென்று பயணிகள் அவசர வழியினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.