இந்தியா – ராஜஸ்தான் பகுதியில் இன்றைய தினம்(09), இந்திய விமானப்படையின் போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி, விமானி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

குறித்த விமானம் வான்வெளியில் தடுமாறியபடி பறந்து, வயல்வெளியில் வீழ்ந்து நொறுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேவேளை, விமான விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



