Tamil News Channel

விமான நிலையத்தில் விசா வழங்குதில் குழப்பம்…!

விசா வழங்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் கூச்சலிட்ட பயணி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் அவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில், குறித்த பயணியின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் புதிய திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய சூழ்நிலை எழுந்தது.

எவ்வாறாயினும், GBS Technology Service, IVS Global மற்றும் VFS World Wide Holdings நிறுவனங்களுடன் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள விசா வழங்கல் தொடர்பான ஒப்பந்தம் தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க கருத்து வெளியிடுகையில்,

தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விசா வழங்குவதில் தாமதம் மற்றும் முறைமையில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், தொழில்நுட்ப சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், அடுத்த வாரம் இந்த முறைமை மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான உறுதியாக திகதியை அவர் அறிவிக்கவில்லை.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான விசா வழங்குவது தொடர்பிலான நிலைமையை அறிவிப்பதற்காக அமைச்சர் திரான் அலஸ் இன்று காலை விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts