இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB)  ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து குறித்த தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரண்டு என்ஜின்களும் நடுவானில் நின்று போனதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அதற்கான காரணம் என்பதும் உறுதியாகியுள்ளது.

கப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் விவாதித்த கொக்பிட் குரல் பதிவுகள் பதிவாகியுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.
AAIB இன் கண்டுபிடிப்புகளின்படி, விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இன்ஜினுக்குப் போக வேண்டிய எரிபொருள் ‘RUN’-ல் இருந்து ‘CUTOFF’-ற்குச் சென்றுள்ளது.

விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல் பதிவுகளில், ஒரு விமானி, “நீங்கள் ஏன் எரிபொருளை துண்டித்தீர்கள்?” என்று கேட்பது கேட்கிறது. அதற்கு மற்றவர், “நான் அவ்வாறு செய்யவில்லை” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட விமானிகள் RAT அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். முதல் என்ஜினை செயலுக்கு கொண்டுவர முயன்று, லேசாக வெற்றி கண்ட போதும், இரண்டாவது என்ஜின் செயல்படவில்லை.

இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பி ஜே மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதியதில் 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார், இது பல தசாப்தங்களில் இந்தியாவின் மிக மோசமான விமானப் பேரழிவாக மாறியது.

இதற்கிடையே, இரண்டு இயந்திரங்களும் விரிவான பரிசோதனைக்காக மீட்கப்பட்டுள்ளதாகவும், இடிபாடுகள் உள்ள இடம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் AAIB உறுதிப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here