வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை- 6பேர் உயிரிழப்பு!
வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பேருந்து மீது கற்பாறைகள் வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
32 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து மீது பாறைகள் வீழ்ந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
![]()