2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்த்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடுய கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது.
கொல்கத்தா சார்பாக சுனில் நரேன் (Sunil Narine) 109 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் (Avesh Khan) மற்றும் குல்தீப் சென் (Kuldeep Sen) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை ராஜஸ்த்தான் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்த்தான் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிழக்கை அடைந்தது.
ராஜஸ்த்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் (Josh Buttler) 107 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் (Sunil Narine), வருன் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy) மற்றும் ஹர்சித் ரானா (Harshit Rana) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்த்தான் வீரர் ஜோஸ் பட்லர் (Josh Buttler) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் ராஜஸ்த்தான் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலாவது நிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஆறாவது நிலையில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது நிலையில் உள்ள டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதவுள்ளன.