Tamil News Channel

விவசாயத்துறை வீழ்ச்சிக்கு தற்போதைய ஜனாதிபதி தான் காரணம்;சஜித்…!

நில் வளவை கங்கை பெருக்கெடுத்து மக்கள்   துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக  கருத்து வெளியிட்டுள்ளோம்.

அரசாங்கம் அதனை ஒரு சதத்திற்கேனும் கருத்தில் கொள்ளவில்லை. இது தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நிறுவியிருந்த சந்தர்ப்பத்தில், நட்ட ஈடு கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு நட்டை ஈடு வழங்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்த போது, அந்தப் பிரதேசத்தில் உள்ள  பத்தாயிரம் ஏக்கர் வயல் காணிகளை  அரசாங்கத்திற்கு கையகப்படுத்துவதற்கு  தற்போதைய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

பத்தாயிரம் ஏக்கர்  வயல் காணிகளை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொண்டு வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த  அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தான் பிரதித் தலைவராக இருந்த சமயத்தில் ஒருதடவை “விவசாயத்துறை எமது நாட்டுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்காது” என்று தற்போதைய ஜனாதிபதி கூறினார்.

அவருக்கு விவசாயத்துறை பெறுமதி இல்லாமல் இருந்தாலும் எமக்கு விவசாயமும்  விவசாயிகளும் பெருமதியானவர்கள்.

நில் வளா திட்டத்தின் ஊடாக நில்வளா கங்கையின் மேலதிக நீரை வறண்ட பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதும்,  நீர் பெருக்கெடுப்பின் ஊடாக அனர்த்தங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கி அந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின்  தீர்வாக அமையும் என  எதிர்க்கட்சித் தலைவர்  குறிப்பிட்டார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்றாவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று (17.08) மாத்தறை அக்குரஸ்ஸ நகரில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே பெருந்திரளான பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது வரை தேயிலை தொழிற்சாலைகள்  பாரிய நெருக்கடிக்குள் உள்ளாகி இருக்கின்றன. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தேயிலை உற்பத்தியில் உள்ள விவசாயிகளுக்கு  சலுகைகள் வழங்கப்படும். விவசாயத் துறைக்கு உயர் தரத்திலான உள்ளீடுகளை வழங்குவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதேபோன்று கருவா உற்பத்தியில்  எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலனை இதுவரை எட்ட முடியாது இருந்திருக்கிறது. எனவே அதற்கு பொருத்தமான துறையை அறிமுகப்படுத்தி ஏற்றுமதி சந்தையில் சிறந்த இடத்தை பெற்றுக் கொள்ள முடியும்.  ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜப்பானுக்கும்  ஏற்றுமதி செய்யக்கூடிய கருவா வகைகளை உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலவசக் கல்வியை மேம்படுத்துவதோடு  நாணயம் மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதற்கு நவீன தொழில்நுட்பத் துறை கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை  ஏற்படுத்துவேன். இளைஞர் படையணி,  தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகிய நிறுவனங்கள் ஊடாக எந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதில்லை என்பதால்  இவ்வாறான நிறுவனங்களை மேலும்  வலுப்படுத்தி, இந்தியாவில் உள்ளதை  போல  IIT மற்றும் IIM  போன்ற நிறுவனங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன் என்று  எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது  சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts