Tamil News Channel

விவாகரத்தான 49 வயது நடிகருடன் திருமணம்…! டிடி பரபரப்பு தகவல்

தமிழ் சினிமா கதாநாயகிகள் அளவுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமாக பார்க்கப்படுபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் இந்திய தொலைக்காட்ச்சி தொகுப்பளார் மற்றும் நடிகையும் ஆவார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

குறிப்பாக தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்பட துறை சார்ந்த விழாக்கள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

தொகுப்பாளினி டிடி:

டிடி விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் அந்த வகையில் அவரது கலகலப்பான பேச்சும் எதார்த்தமான உரையாடலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

குறிப்பாக இவர் பிரபலங்களை வைத்து நேர்காணல் நடத்தும் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள் .

அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் மிகவும் விருப்பப்பட்டு வந்து கலந்து கொள்வார்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்களது ரகசிய விஷயங்களையும் அவர்களின் மனம் நோகாமல் மிகவும் லாவகமாக  பேசி வாங்குவதில் மிகவும் கைதேர்ந்தவராக பார்க்கப்படுகிறார் திவ்யதர்ஷினி.

இது தவிர அவர் ஜோடி நம்பர் ஒன் , சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் டி 20, ரெடி ஸ்டெடி கோ, என் கிட்ட மோதாதே உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துள்ளார்.

லட்சங்களில் சம்பளம் :

அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்களில் டிடியும் ஒருவர். ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவே இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் திவ்யதர்ஷினி விருது விழா, இசை வெளியீட்டு விழா, திரைப்பட விழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி அதன் மூலமும் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வருகிறார்.

காலில் அறுவை சிகிச்சை:

தற்போது 39 வயதாகும் திவ்யதர்ஷினி தொடர்ந்து தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். இவரிற்கு காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக தொடர்ச்சியாக நின்று கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாது. இது தொடர்பாக “என்னால் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்த முடியவில்லை” என சமீபத்திய பேட்டிகளில் மிகுந்த மன வருத்தத்தோடு கூறி இருந்தார் .

அது மட்டும் இல்லாமல் அவர் வீல்சேர், வாக்கர் ஸ்டிக்கர் வைத்து நடந்து செல்லும் வீடியோக்களும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கும் வீடீயோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

டிடி திருமணம் :

டிடி கடந்த 2014ல் தன்னுடைய நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் நட்சத்திர பிரபலங்கள் பல பேர் ஒன்று கூடி வந்து வாழ்த்தினார்கள் .திருமணம் ஆன சில வருடங்களிலேயே இவர் விவாகரத்தும் பெற்றுக்கொண்டார்.

இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கடந்த 2017ல் பிரிந்து விட்டார்கள். 2017 ஆம் ஆண்டு பிரிந்த இவர்கள் தற்போது வரை திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இதனிடையே இவர் நடிகர் தனுஷ் மற்றும் சில பல பிரபலங்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். இவரது வீடியோக்கள் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. இதுவே இவரது விவாகரத்துக்கு காரணமாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விவாகரத்து ஆன நடிகருடன் திருமணம்:

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் டிடி சமீபத்திய பேட்டி ஒன்றில், ”நான் பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனை விரும்புகிறேன். அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதே போல் பிரபல இசை அமைப்பாளரான ஏ ஆர் ரகுமானை அடுத்த ஜென்மத்தில் திருமணம் செய்து கொள்வேன்” எனவும்  கூறியிருக்கிறார். டிடியின் இந்த வெளிப்படையான பேச்சு பலரயும் வியப்புகுள்ளாக்கியதுள்ளதுடன் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

49 வயதாகும் பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts